புதுதில்லி;
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியானது, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஒரு அணியாகவும், மூத்த தலைவர் சரத் யாதவ் தலைமையில் ஒரு அணியாகவும் பிளவுபட்டது. ஆனால், நிதிஷ் குமார் தலைமையிலான அணிதான், உண்மையான ஐக்கிய ஜனதா தளம் கட்சி என்று முடிவு செய்த தேர்தல் ஆணையம், இந்த அணிக்கே, ஜக்கிய ஜனதாதளத்தின் தேர்தல் சின்னமான ‘அம்பு’ சின்னத்தையும் வழங்கியது.இந்த முடிவுக்கு எதிராக சரத் யாதவ் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இன்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், சரத் யாதவின் புகார் தொடர்பாக, தேர்தல் ஆணையமும், நிதிஷ் குமாரும் பிப்ரவரி 18-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

Leave A Reply