கோவை, டிச. 6-
சட்டமேதை அம்பேத்கரின் 61 ஆவது நினைவு தினத்தையொட்டி புதனன்று பல்வேறு இடங்களில் அம்பேத்கரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கோவை டாடாபாத் அருகில் உள்ள இந்திய உணவுக் கழக வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் முழு உருவச்சிலைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம் தலைமையில் முன்னணியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ், இன்சூரன்ஸ் சங்கத்தின் தலைவர் வி.சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கோவை இருகூர் பகுதியில் நடைபெற்ற அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சூலூர் தாலுகா செயலாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். மேலும், கோவை சித்தாபுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஈரோடு:
ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் அம்பேத்கர் படத்திற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர். ரகுராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல், அம்பேத்கர் நகர், நசியனூர், கொடுமுடி, மொடக்குறிச்சி, சிவகிரி, அந்தியூர், கூடுமைனூர், பவானி, கோபிச்செட்டிபாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை உள்ளிட்ட இடங்களில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் சட்டமேதை அம்பேத்கர் உருவபடத்திற்கு மாலை மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எஸ்.சுப்பிரமணியன், கோமதி, மா.அண்ணாதுரை, பி.சுந்தர்ராஐன், சுரேஷ்பாபு, முருகையா, சின்னையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம்:
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னிணியின் மாவட்ட தலைவர் எ.கலியபெருமாள் தலைமையில் பேரணியாக சென்று சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்புள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி மற்றும் எம்.கனகராஜ், டி.செல்வகுமார், எஸ்.செல்லபாண்டியன் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதேபோல், சேலம் மாநகரம் பெரியார் சிலை முன்பிருந்து வாலிபர் சங்கத்தினர் பேரணியாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். வாலிப சங்க மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் என்.பிரவின்குமார், நிர்வாகிகள் பி.கணேசன், வெங்கடேஷ், பெரியசாமி, கோகுல கண்ணன் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர். ஆத்தூர் தாலுகா பெத்தநாய்க்கன் பாளையம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாதர் சங்க மாவட்ட நிர்வாகி பெருமா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்
பட்டது.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியின் நரிப்பள்ளத்தில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மாவட்ட தலைவர் எம்.கணேசபாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.துரைசாமி, ஒன்றிய செயலாளர் ஆர்.வேலாயுதம், நகர செயலாளர் ஐ.ராயப்பன், மாணவர் சங்க மாவட்ட துணைத்தலைவர் தேன்மொழி மற்றும் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்:
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் அம்பேத்கரின் நினைவு நாள் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது. திருப்பூர் புதுமார்க்கெட் வீதியிலுள்ள அம்பேத்கரின் சிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது . இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் குமார், தெற்கு மாநகர செயலாளர் சுந்தரம், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜகோபால், தெற்கு ஒன்றிய செயலாளார் மூர்த்தி, தெற்கு மாநகர செயலாளார் ஜெயபால், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் நந்தகோபால், மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் விமல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஊத்துக்குளி பகுதியில் ஊத்துக்குளி ஆர்.எஸ், பாரதிநகர், கரைப்பாளையம், சென்னிமலைபாளையம், சொட்டகவுண்டன் புதூர் ஆகிய இடங்களிள் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தாலுகா தலைவர் குழந்தைசாமி, தாலுகா செயலாளர் ராமசாமி, சிஐடியு பனியன் சங்க செயலாளர் பழனிசாமி, மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் சிவசாமி, வாலிபர் சங்க தாலுகா குழு உறுப்பினர் மார்க்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். வேலம்பாளையம் நகரக்குழுவின் சார்பில் அனுப்பர்பாளையம், சத்யாநகர், நேதாஜிநகர், புதுக்காலனி, சிறுபூலுவபட்டி ஆகிய இடங்களிள் அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நகர தலைவர் குப்புசாமி, நகர செயலாளர் பாபு, மார்க்சிஸ்ட் கட்சி நகர செயலாளர் சுப்பிரமணியம், நகரகுழு உறுப்பினர்கள் ஆறுமுகம், சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பல்லடம் பேருந்து நிலையம் முன்பு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சி நகர செயலாளர் பரமசிவம், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் அஷரப் ஆகியோர் கலந்து கொண்டனர். திருப்பூர் வடக்கு நகரத்திலுள்ள அம்பேத்கர் நகரில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நகர செயலாளர் தமிழ்வாணன், மார்க்சிஸ்ட் கட்சி நகர செயலாளர் முருகேசன், வாலிபர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். பிஎஸ்என்எல் ஊழியர்கள் சார்பில் திருப்பூர் மற்றும் பல்லடத்தில் அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட உதவி செயலாளர் காந்தி, சுப்பிரமணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பல்லடம் ஒன்றிய தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

%d bloggers like this: