மாஸ்கோ,

2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷியாவுக்கு அனைத்துலக ஒலிம்பிக் குழு தடை விதித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டில் சோச்சி நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய வீரர், வீராங்கனைகள் ஊக்க மருந்து எடுத்துக்கொண்டதாகவும், அந்நாட்டு அரசே இதற்கு உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக ரஷிய வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் ரஷிய கொடி இடம் பெறாததுடன், அந்நாட்டு தேசிய கீதமும் ஒலிக்கப்பட போவதில்லை. இருப்பினும், ரஷ்ய விளையாட்டாளர்கள் தங்கள் நாட்டைப் பிரதிநிதிக்காமல், ஒலிம்பிக் கொடியின்கீழ் போட்டிகளில் கலந்துகொள்ளலாம் என்று குழுவின் தலைவர் தோமஸ் பாச் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: