இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 6 மடங்குவரை உயரக் குடும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி கேப்டன் விராட் கோலிக்கு ஆண்டு சம்பளமாக ரூ.12 கோடிக்கும் அதிகமாக கிடைக்கக்கூடும் என கருதப்படுகிறது.இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தைஉயர்த்தும்படி கேப்டன் விராட் கோலி, சீனியர்வீரர் தோனி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராயை சமீபத்தில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அப்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களுக்கு இணையாகசம்பளம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆண்டு வருமானமாக சுமார் ரூ.12 கோடிபெற்று வருகிறார்.

இங்கிலாந்து கேப்டன்ஜோ ரூட் அதற்கு சமமான அளவில் ஊதியம்பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இந்திய வீரர்களுக்குவழங்கப்படும் ஊதியம் குறித்தும் அதேவேளையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் சம்பளம் பெறும் விகிதம் குறித்தும்ஒப்பிட்டு விவாதம் நடைபெற்றது. இதன்முடிவில் பிசிசிஐ நிர்வாகக்குழு, வீரர்களின் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என்பதை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் எந்தவித உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.தற்போதைய ஒப்பந்தத்தின்படி இந்திய கிரிக்கெட் வீரர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி ஏ கிரேடு வீரர்களுக்கு ரூ.2 கோடியும், பி கிரேடு வீரர்களுக்கு ரூ.1 கோடியும், சி கிரேடுவீரர்களுக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊதிய ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.புதிய ஒப்பந்தத்தின்படி ஏ கிரேடுவீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ-12 கோடியும்,பி கிரேடு வீரர்களுக்கு ரூ.8 கோடியும், சி கிரேடு வீரர்களுக்கு ரூ.4 கோடியும் வழங்கப்படும் எனத் தெரிகிறது. அதேவேளையில் கேப்டனுக்கு ரூ.12 கோடிக்கு அதிகமாக சம்பளம் இருக்கும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் பிசிசிஐ இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Leave A Reply

%d bloggers like this: