தில்லி,

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நிகழாண்டுக்கான ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆய்வுக் கூட்டம் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்கோ ரேட்), வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம்(ரிவர்ஸ் ரெப்கோ ரேட்) ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதம் 6 சதவீதமாகவும், ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதமும், எஸ்எல்ஆர் 19.5 சதவீதமும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 5.75 சதவீதமாகவும் தொடரும் என  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், நடப்பாண்டில் 3 ஆவது மற்றும் நான்காம் காலாண்டில் பணவீக்கம் 4.3, 4.7 சதவீதமாக இருக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும். டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக டெபிட் கார்டுகளுக்கான கட்டணத்தை குறைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: