மொபைல் போன் களில் மின்சாரத்தை சேமித்துவைக்க லித்தியம்அயன் லித்தியம்பாலிமர் நிக்கல் காட்மியம், நிக்கல் மெட்டல்ஹைட்ரைட் எனப் பல வகை பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன.
15 நிமிடங்களுக்குள்ளாக சார்ஜ் செய்வதற்கான புதிய லித்தியம் தொழில்நுட்ப பேட்டரிகளும் வரத்தொடங்கியுள்ளன. இன் றைய மொபைல் போன்களைப் பொறுத்தவரை லித்தியம் அயன் வகை பேட்டரிகளே அதிகம் பயன்பாட்டில் உள்ளன.லித்தியம் அயன் லித்தியம் என்பது ஒருவகை உலோகம்.

இது தனிம அட்டவணையில் மூன்றாவதாக இடம்பிடித்திருக்கிறது. பிற உலோகங்களை விட மிகவும் மெல்லியதாகும். கடுகு சிறுத்தாலும் காரம்குறையாது என்பதுபோல மெலிதாக இருந்தாலும் அதிக திறன் மிக்கது. உதாரணமாக லித்தியம் எலெக்ட்ரான்களை இழந்து அயனியாக மாறும்போது சுமார் 4 வோல்ட்மின்சாரத்தை தரும். மற்ற உலோகங்கள் வெறும் 1.5 வோல்ட் அளவே மின்சாரத்தைக் கொடுக்க முடியும். இதுமட்டுமல்லாது லித்தியத்தின் மெல்லிய மற்றும் எடை குறைவான தன்மையும் கூடுதல் சிறப்பம்சமாகும்.

ஒரு கிலோ ஈயத்தில் ஒரு மணி நேரத்திற்கு 260 ஆம்பியர் அளவு மின்சாரத்தைச் சேமிக்க முடியும். அதனையே ஒரு கிலோ லித்தியத்தில் சுமார் 3860 ஆம்பியர் அளவு மின்சாரத்தைச் சேமிக்க முடியும்என்றால் அதன் திறன் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். லித்தியம் உலோகம் இயற்கையில் தூய நிலையில் கிடைப்பதில்லை. மற்ற தாதுக்களில் இருந்துதான் இதனைப் பிரித்தெடுக்கின்றனர். காற்றில் இருக்கும் ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் வாயுக்களுடன் லித்தியம் வினைபுரிந்து விடும் என்பதால் தூய்மைப்படுத்தப்பட்ட லித்தியத்தை பாதுகாப்பாக வைக்க ஈரப்பதமற்ற சூழலில் ஆர்கான் அல்லது ஹீலியம் போன்ற மந்த வாயுக்கள் நிரப்பியகலன்களில் சேமித்துப் பயன்படுத்துவர். மொபைல்போன் பேட்டரிகளில் சார்ஜ் ஏற்றம் செய்யும்போதுநேர்மின் தகட்டிலிருந்து கிராஃபைட் என்று கரிம படிவ அடுக்குகளை வந்தடைகின்றன. இங்கு பாதுகாப்பாக இருக்கும்லித்தியம் அயனிகள் பேட்டரியைப் பயன்படுத்தும்போது மீண்டும் நேர்மின்தகட்டை நோக்கி வேகமாகச் செல்கின்றன. இந்த நிகழ்வின்மூலமே மின்சக்தி வெளியிடப்படுகிறது.

லித்தியம் பேட்டரிகளில் சார்ஜ் நீடிக்கபோன்களை சார்ஜ் செய்வதுஎல்லாருக்கும் உள்ள பிரச்சனை.அதிலும் அடிக்கடி சார்ஜ் போடலாமா? பேட்டரியை முழுமையாகசார்ஜ் போடுவது அவசியமா? அதிக நேரம் சார்ஜ் நீடிப்பதில்லையே ஏன்? என்று பல கேள்விகள் எழுகின்றன.

இந்த கேள்விகளுக்கு காரணம் யார் என்றால் அது நாம்தான் என்கிறது இதுகுறித்த ஆய்வினை மேற்கொண்டகேடெக்ஸ் என்ற பேட்டரி நிறுவனம். பேட்டரி சார்ஜ் செய்வதற்கு சில குறிப்புகளையும் அது வழங்கியுள்ளது. அதனைப் படித்தாலே நம்முடைய தவறு எங்குள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.பேட்டரிகளுக்கான ஆயுட் காலம் என்பதை ஒரு முறை சார்ஜ் செய்வதற்கும் மீண்டும் அடுத்து முறை சார்ஜ் செய்வதற்குமான இடைவெளியை ஒரு வாழ்நாள் சுற்று (டுகைந ஊலஉடந) என்பதாகக் கணக்கிடப்படுகிறது.

ஒரு பேட்டரிசராசரியாக 300 முதல் 500 வாழ்நாள் சுற்றுகளை கொண்டிருக்கும். இந்த வாழ்நாள் சுற்று எண் ணிக்கையை அதிகரிக்க சரியானமுறையில் சார்ஜ் ஏற்றம்செய்வதும் பிறகு சரியான அளவில் சார்ஜினை இறக்கம் செய்வதும் அவசியம்.நாம் இதுநாள் வரை பேட்டரிகளை 100 சதவீதம் சார்ஜ் ஆவதைமட்டுமே உறுதிப்படுத்தி வந்துள் ளோம்.

ஆனால், லித்தியம் பேட்டரிகளைப் பொறுத்தவரை அது அவசியமில்லை என்கிறது இந்த ஆய்வு. 100 சதவீதம் சார்ஜ் ஆன பிறகும் டிரிக்கல் சார்ஜ் என்ற வேலை நடைபெறுவதை பேட்டரி சேவர் ஆப்களைப் பயன்படுத்துவோர் கவனித்திருப்பீர்கள். இது நீண்ட உடற்பயிற்சிக்குப் பின் உடலை ஆசுவாசப்படுத்துவதைப் போன்றதாகும். குறிப்பாக இரவில் சார்ஜ்போட்டுவிட்டு காலையில் எடுப்பதுதவறாகும். இவ்வாறு முழுமையாக சார்ஜ் ஆக விடுவது பேட்டரிக்கு அதிகளவு அழுத்தத்தையும், வெப்பத்தை அதிகரிப்பதாகவும், இதன் காரணமாக சீக்கிரமே பேட்டரியின் ஆயுள் குறைந்துவிடுவதாகவும் கூறுகின்றனர்.

பேட்டரியின் ஆயுளை நீட்டிக்க சார்ஜ் செய்வதற்கான காலத்தை கணக்கிட்டு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் பேட்டரிசார்ஜ் 100 சதவீத அளவில் இருக் கும் போது மேற்கொண்டு சார்ஜ் செய்தால் அதன் வாழ்நாள் 300 சுற்றுகள் என்றும், அதுவே 80 சதவீத அளவில் இருந்தால் 400 முதல்900 சுற்றுகளும், 60 சதவீதம் எனில்600 முதல் 1500 சுற்றுகள், 40 சதவீதமெனில் 1500 முதல் 3000 சுற்றுகள், 20 சதவீதம் எனில் 1500 முதல்9000 சுற்றுகள், 10 சதவீதமெனில் 10000 முதல் 15000 சுற்றுகள் வரைவாழ்நாள் அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பேட்டரியை 10 சதவீதம் முதல்20 சதவீதம் என்ற அளவு மின் சக்திஇருப்பில் இருக்கும்போதே சார்ஜ்செய்யத் தொடங்கலாம்.

இது சாத்தியமில்லை என்றால், ஒருநாளில் இரண்டு, மூன்று முறைகூடதேவை கருதி சார்ஜ் போடுவதில் பெரிய பிரச்சனைகள் எழுவதில்லை. அதிக நேரம் போனினை சார்ஜரில் வைப்பதால் சூடாவதாக உணர்ந்தால், கிடைக்கும் நேரங்களில் மட்டும் அவ்வப்போது சார்ஜ்செய்தாலே போதும் பேட்டரி ஆயுள் நீடித்திருக்கும். முடிந்த வரை ஸ்மார்ட்போன் பேட்டரிகளை குளிர்ச்சியாக வைக்க வேண்டும். அதிகப்படியான சூடு ஸ்மார்ட்போன்களின் பேட்டரிக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த போனுக்குமே கேடு விளைவிக்கக் கூடியது.

எப்பொழுதெல்லாம் உங்கள் போன் சூடாக உள்ளதாக உணர்கிறீர்களோ அப்போதெல்லாம் போனை அணைத்துவிடுவதோ அல்லதுசார்ஜரில் இருந்து எடுத்துவிடுவதோ நல்லது. அல்லது மேல்கவரை உடனே கழற்றி காற்றோட்டம் கிடைக்கச் செய்யலாம். வெயிலிலோ அல்லது வெப்பமான இடங்களுக்கோ செல்லும் போது போன் சூடாகாமல் இருக்கும்படி பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அதேபோல சார்ஜ் போடும் போது போனில் கூடுதல் பயன்பாடுகளான இண்டெர்நெட், வைபை,புளூடூத் மற்றும் பிற ஆப்கள்பயன்படுத்துவதை நிறுத்திவைக்கவேண்டும். இவை செயல்பாட்டில் இருப்பதால் போன் கூடுதலான மின்சக்தியை செலவழித்தபடியே சார்ஜ் செய்யப்படுவதால் பேட்டரியில் சூடு அதிகரிக்கும்.

Leave A Reply

%d bloggers like this: