நியூயார்க்,

கலிபோர்னியா மாகாணத்தின் மலையோர பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் வடக்கே வென்ச்சுரா கவுண்ட்டி மலையோர பகுதியை ஒட்டியுள்ள சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ பற்றி எரிகிறது. மணிக்கு சுமார் 115 கி.மீ., வேகத்தில் வீசும் சூறைக்காற்றால் பிற பகுதிகளிலும் தீ பரவி வருகிறது. தீயை அணைக்க 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தீ காரணமாக அங்கு இருக்கும் சில பள்ளிகள் எரிந்து சம்பலாகியிருக்கிறது. 500-க்கும் அதிகமான வீடுகள் முழுவதுமான எரிந்துள்ளது. இதுவரை 30,000 மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: