#தீக்கதிர் #Theekkathir

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமை விலங்கைப் பூண்டிருந்தோம்…
தாயகம் என்பதும் தாரணி என்பதும்தாழ்சிறைக் கூடம் என்றிருந்தோம்…
நாயினும் கீழாய் நலிந்து கிடந்தோம்…
நாயகர் ஒருவர் மீட்க வந்தார்… தீயின் கனலாய்ப் போர்வழி கண்டார் –தீரர் அவர்பெயர் அம்பேத்கர் ! – (ஆயிரமாயிரம்…) ஆலயம் என்பது எங்களுக் கில்லை…
அருந்திட ஊருணி கிடைத்ததில்லை…
காலுக்கும் செருப்புக்கும் உறவுகள் இல்லை…வீதியில் நடந்திட முடிந்ததில்லை…
தோளுக்கும் துண்டுக்கும் உறவுகள் இல்லை…
தூரக் கிடந்தது கல்விநிலை…
காலத்தை மாற்றி, சட்டம் இயற்றினார்-காவலன்அவர்பெயர் அம்பேத்கர் !- (ஆயிரமாயிரம்…)
சாவுக்கு ஒலித்த பறையொலி இன்றுசாதிகள் மாய்ந்திட முழங்குதுபார் !ஏவலும் காவலும் செய்தது மாறிஏற்றங்கள் பெற்றோம், காரணம்யார் ?ஆவின மலஜலம், ஆண்டைகள் சவுக்கடி,அதிகாரக் கோட்டைகள் தகர்த்தவர்யார் ?தூவிடு மலர்கள் !… கூவிடு அவர்பெயர் –தூயநல் மேதை அம்பேத்கர் !-(ஆயிரமாயிரம்…)

Leave A Reply

%d bloggers like this: