போபாபல்
மத்தியப் பிரதேத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசத்தின் டெபுலூர் தெஹில்  மாவட்டத்தின் சந்தர் என்ற கிராமத்தில் 8 வயது சிறுமி ஒருவர் அவரது உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். அதே கிராமத்தில் உள்ள சந்தீப் சாங்லால் ( வயது 19) என்பவர் பாதிக்கபட்ட சிறுமியின் வீட்டில் குழந்தைகளுடன் டிவி பார்த்து கொண்டு இருந்தார். வீட்டில்  சிறுமியின் பெற்றோர்கள் இல்லை. இதனால் குழந்தைகள் அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டு உள்ளது. சிறுமியின் அத்தை வந்த போது இந்தசம்பவம் தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து பெற்றோர் கொடுத்த புகாரின் போரின் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மத்திய பிரதேசத்தில் 12 வயதிற்கு  குறைவான வயதுள்ள சிறுமிகளை  பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதா மத்தியப் பிரதேச சட்டப் சபையில்  கடந்த திங்கள்கிழமை  நிறைவேற்றப்பட்டது. இந்த மசோத நிறைவேற்றப்பட்ட இரண்டு நாட்களில் இந்த சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply