மும்பை,

மகாராஷ்டிரா மாநிலத்தில் 16 கிடங்குகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கிய 50 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவின் பிவாண்டி மாவட்டம் மான்கோலி பகுதியில் சாகர் வளாகத்தில் உள்ள கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவி அருகில் உள்ள 16 கிடங்குகளுக்கு பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 12 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 50 பேர் மீட்கப்பட்டுள்ளனர் . அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக இருப்பதால் மீட்பு பணிகளில் தாமதமாகிறது என தீயணைப்பு அதிகரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply