இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள் என்ற எண்ணத்தைப் பழங்குடி இன மக்களிடமிருந்து மாற்றுவதற்கு தாங்கள் முயற்சி செய்வதாக பாஜககூறுகிறது. அவர்களும் இந்தியாவின் ஒரு பகுதியினரே. பாரதமாதா அவர்களுக்கும் சொந்தம் என்று பாஜக அந்த மக்களைத் தன் வசப்படுத்தும் சூழ்ச்சியில் இறங்கியுள்ளது.

`பாரதமாதா படம் எப்படி இருக்கும்? நீண்ட புடவையும் ஆடை ஆபரணங்களும் அணிந்து தனது சிங்க வாகனத்துடன் ஒரு கையில் கொடியைப் பிடித்து நிற்பதாகவே பாரதமாதா பற்றிச் சொல்லும்போது நம் மனதில் தோன்றும். ஆனால், திரிபுராவில் பாஜக முன்வைக்கிற பாரதமாதா படம் பழங்குடி இனப் பெண்கள் அணிகிற ஆடைகளுடன் தோன்றுகிறது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திரிபுரா சட்டப்பேரவைக்குத் தேர்தல்நடைபெறவுள்ளது. இதை நோக்கமாகக் கொண்டுதான் பாரதமாதா என்ற கற்பனையைப் பழங்குடி இன மக்களிடம் கொண்டு சேர்க்க பாஜக முயற்சி செய்கிறது.

இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள் என்ற அவர்களின் சிந்தனையை மாற்றுவதற்காகவே தாங்கள் இவ்வாறு முயற்சிப்பதாக பாஜக கூறுகிறது.“பாரதமாதா அவர்களுக்கும் சொந்தம். ஒவ்வொரு பழங்குடி இனமக்களுக்கும் அவர்களுக்கே உரியகலாச்சாரங்களும் ஆடை அணிகலன்களில் வித்தியாசங்களும் உண்டு.அவற்றை நாம் மதிக்க வேண்டும்’’ என்று பழங்குடி மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர் போலக்காட்டிக் கொள்கிறார் பாஜகவின் திரிபுரா மாநிலப் பொறுப்பாளர் சுனில் தியோதர்.முக்கியமாக தெர்பா, திரிபுரி, ரியாங், சக்மா ஆகிய நான்கு பழங் குடி இனப் பிரிவினர் திரிபுராவில் உள்ளனர். 77. 8 சதவீதம் வரையானமக்கள்தொகையில் இந்தப் பிரிவினரே அதிகமாக உள்ளனர். இவர் களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்திலேயே பாரதமாதாவை பாஜக முன்வைக்கிறது.

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் மற்ற 300 பழங்குடிஇனப் பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற பாரதமாதாவைச் சித்தரித்து வழங்குவோம் என்றும் பாஜக பொறுப்பாளர் சுனில் தியோதர் கூறுகிறார்.மாநிலத்தில் பாஜகவின் எல்லா நிகழ்ச்சிகளிலும் இனி அக்கட்சியின் நிறுவனத் தலைவர்களாகிய தீனதயாள் உபாத்யாயா, சியாம பிரசாத்முகர்ஜி ஆகியோரின் படங்களுடன் சேர்த்து புடவை அணிந்தபாரதமாதா படமும், பழங்குடி இனமக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பாரதமாதா படமும் இருக்கும் என்றார் அவர். திரிபுராவின் மக்கள் தொகையில் அதிகமானோர் வங்கத்திலிருந்து வந்து குடியேறியவர்கள். அதனால்தான் இவ்வாறு செய்வதாகக் கூறுகிறார்.திரிபுராவில் வெற்றி பெறுவதற்குப் பழங்குடி இன மக்களின் ஆதரவு முக்கியத் தேவை என்ற நிலையில், இத்தகைய புதிய சூழ்ச்சியில்இறங்கியுள்ளது பாஜக. திரிபுராவின் மக்கள் தொகையில் மூன்றிலொருபகுதி மக்கள் பழங்குடி இனத்தவர்கள்.

திரிபுரா மாநிலத்தில் பழங்குடி இன மக்களுக்காகத் தனியே `பழங்குடி இன சுயாட்சிமாவட்டக் கவுன்சில்’ உள்ளது. மாநிலத்தின் 68 சதவீதப்பிரதேசங்களும் இந்தக்கவுன்சிலின்கீழ் வரும். இங்குதான் திரிபுராவின் 80 சதவீதப் பழங்குடி இன மக்களும் வசிக்கிறார்கள்.இந்த சுயாட்சிக் கவுன்சிலை முழுமையான அதிகாரங்களும் நிதியும் அளித்து இடது முன்னணி அரசு திறம்பட நிர்வகித்து வருகிறது.

இந்த மாநிலத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இரண்டு முக்கியகட்சிகளான ஐபிஎஃப்டியும், ஐஎன்பிடி-யும் இப்போது பாஜகவின் `வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி’யில் (நார்த் ஈஸ்ட் டெமாக்ரட்டிக் அலயன்ஸில்) உள்ளன. `தனி பழங்குடி இன மாநிலம்’ என்கிற கோரிக்கையை வலியுறுத்தும்கட்சிகள் இவை. இவர்களின் தனிமாநிலக் கோரிக்கையில் பாஜகவுக்கும் உடன்பாடு உண்டு.திரிபுராவின் மக்கள் தொகை 99 லட்சத்து 30 ஆயிரம். இதில் 31 சதவீதம் பேர் – அதாவது, 31. 99 சதவீதம் பேர் பழங்குடியினர். அதனால், இவர்களின் வாக்குகளைக் கவர்வதே பாஜகவின் நோக்கமாக உள்ளது. நன்றி: “மாத்ருபூமி” மலையாள நாளிதழ் (28.11.2017)தமிழில்: தி.வ.

Leave a Reply

You must be logged in to post a comment.