இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் வரிசிஸ்தான் பகுதியில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அதிகாரிகள் உட்பட 9 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

பாகிஸ்தானின் வசிரிஸ்தான் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 அதிகாரிகள் உட்பட 9 ராணுவ வீரர்கள் பலியாகினர். முதல் கட்ட விசாரணையில், தீவிரவாதிகள் அந்த பகுதியில் வெடிகுண்டுகளை புதைத்து வைத்ததும், ராணுவ வாகனம் அந்த பகுதியை அடைந்ததும் ரிமோட் மூலம் வெடிகுண்டை தீவிரவாதிகள் வெடிக்க செய்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Leave A Reply

%d bloggers like this: