பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் முழு காப்பீடு தொகை வழங்க வேண்டும் வலியுறுத்தி டிச.5 அன்று ஊத்துக் கோட்டை உதவி வேளாண்மை இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக் கோட்டை உதவி வேளாண்மை இயக்குநர் அலுவலகத்திற்கு உட்பட வேளாண் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் திருக்கண்டலம், பூரிவாக்கம், சேத்துப்பாக்கம், தாமரைப்பாக்கம், மாளந் தூர், பெரியபாளையம், காக்கவாக்கம் உள்ளிட்டு 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளிலிருந்து 3 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் நெற் பயிர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக காப்பீட்டுத் தொகை செலுத்தியுள்ளனர்.

இப்படி காப்பீட்டுத் தொகை செலுத்தியவர்களின் நெற்பயிர்கள், மழை வெள்ளம், வைரஸ் மற்றும் இயற்கை சீற்றத்தால் பாதிக் கப்பட்டுள்ளது.ஆனால் வேளாண்துறை இது வரை பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு காப்பீட்டுத்தொகையை முழுமையாக வழங்கவில்லை.கணக்கெடுப்பு கூட முறையாக நடத்தவில்லை. இந்தக் காப்பீடு மூலம் விவசாயிக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வரை காப்பீட்டு நிதியாக வழங்க வேண்டும். ஆனால் திருவள்ளூர் மாவட்டத் தில் விவசாயிகளுக்கு வெறும் ரூ.7 ஆயிரம் வரை தான் வழங்கப்படுவதாக விவசாயிகள் கதறுகின்றனர்.பெரும்பாலான விவசாயிகளுக்கு ரூ.1000, ரூ.2 ஆயிரம் மற்றும் சிலருக்கு வெறும் ரூ. 50 கொடுத்து விட்டு அனைவருக்கும் கொடுத்துள்ளதாக கணக்குக் காட்டும் வேலையை அதிகாரிகள் செய்கின்றனர்.மேலும் 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு ஆண்டுகளாகக் காப்பீடு வழங்காத நிலை உள்ளது.இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் முழு காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும், காப்பீடு செலுத்தும் காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும், வேளாண் ஆராய்ச்சி நிலையங் களை மூடக்கூடாது, காப்பீடு நிறுவனங்களைத் தனியாரிடம் ஒப்படைத்துள்ளதைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டிச.5 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்த புகார் மனுவை அதிகாரிகளிடம் வழங்கினர்.மனுவைப் பெற்றுக்கொண்ட வேளாண் உதவி இயக்குநர் பிரசாத காப்பீடு திட்டத்தை அரசு தனியார் வங்கியிடம் ஒப்படைத்துள் ளது. நாங்கள் விவசாயிகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மட்டும் செய்து வருகிறோம். உங் கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த பூரிவாக்கத்தை சேர்ந்த விவசாயி தெய்வசிகாமணி (வயது 54) கூறுகையில், ‘15 ஏக்கர் வரை விவசாயம் செய்து வருகிறோம்.

கடந்த 30 ஆண்டுகளாக திருக்கண்டலத்தில் உள்ள வேளாண் கூட்டுறவு வங்கியில் நெற்பயிருக்கு காப்பீடு தொகையை செலுத்தி வருகிறேன். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வரை காப்பீடு தொகை வழங்கப்படவில்லை’’ என்றார்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் பி.ரவி தலைமை தாங்கினார். இதில் சங் கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சம்பத்,வட்டத் தலைவர் ஏ.மாரிமுத்து, வட்டச் செயலாளர் எம்.பழனி உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: