நூறுநாள் வேலைத் திட்டத்தை முதலாளிகளின் லாபத்திற்காக மத்திய அரசு முற்றிலுமாக அழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்பி குற்றம்சாட்டினார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட 22வது மாநாடு ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரண்டு நாட்கள் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவாகத் திங்களன்று (டிச.4) பெரியார்தூண் அருகில் நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் அவர் பேசியதாவது.மத்திய அரசின் மூன்றரை ஆண்டு ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் தடுமாறத் தொடங்கியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது மார்க்சிஸ்ட் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்தது.

எங்களிடம் 60 எம்பிக்கள் இருந்தனர். நாங்கள் நினைத்திருந்தால் அமைச்சர் பதவி வாங்கியிருக்கலாம், ஆனால் செய்யவில்லை, நூறு நாள் வேலை திட்டத்தை உறுவாக்கிட கடுமையாகப் போராடினோம், அதை யாரும் ஏற்கவில்லை. திட்ட கமிஷனும் எற்கவில்லை. சிபிஎம் பிடிவாதமாக இ இருந்ததால் ஐக்கியமுற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா ஏற்றுக்கொண்டார். தற்போது 200 நாள் வேலை, 400 ரூபாய் கூலி வேண்டும் எனப் போராடிவருகின்றோம். ஆனால் பிஜேபி அரசு அத்திட்டத்தை அழிக்க முயற்சிக்கிறது. அதற்கான நிதியை குறைக்கத் துவங்கியுள்ளது. ஒதுக்கிய பணத்தையும் செலவு செய்ய மறுக்கிறதுகிராமப்புற ஏழை எளிய மக்களை பாதுகாத்திட நூறுநாள் வேலைத் திட்டம் அவசியம்.

இத்திட்டத்தைத் தமிழகத்தில் பாதுகாக்க வேண்டுமானால் திமுக, அதிமுக குரல் கொடுக்கவேண்டும், பிஜேபியை எதிர்க்காவிட்டால் எதிர்காலத்தில் தமிழகத்தில் நூறுநாள் வேலைத்திட்டம் பறிபோய்விடும். நூறுநாள் வேலைத் திட்டத்தைப் பாதுகாக்க தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கவேண்டும்.ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு ஆகியவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். உண்மைக்கு மாறாகப் பொய் சொல்வதில் மோடி கைதேர்ந்தவராகிவிட்டார்.

நாட்டு மக்கள் அனைவரையும் ஏமாற்றும் அளவிற்கு பொய்சொல்வதை வேலையாக வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. கருப்புப் பணம், கள்ளப்பணம், தீவிரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதாகக் கூறினார்கள். ஒழித்தார்களா? இல்லை. அவற்றை ஒழிக்க முடியாது என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். கருப்புப் பணம் அனைத்தும் பணமாக இல்லை. அவை நிலங்களாக, நகைகளாக உள்ளது.அவர்களின் நோக்கம் பணப் புழக்கத்தை குறைக்க வேண்டும் என்பதே, சாதாரண மக்களையும் ரேஷன் கடையில் இருந்து வெளியேற்றி மற்ற கடைகளுக்கு தள்ளவேண்டும், பருப்பை நிறுத்திவிட்டார்கள், அரிசியை நிறுத்தப் போகிறார்கள். ஊழலை ஒழிப்பதாகக் கூறினார்கள். ஒழித்தார்களா, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வீட்டில் ரெய்டு நடைபெற்றது. அதன்பின்னர் தொடர் நடவடிக்கை உண்டா. எனக்குக் கிடைத்த தகவலின் படி ராம்மோகன் ராவ் பிரதமரை சந்தித்திருக்கிறார்.

அந்தச் சந்திப்பும் சுமுகமாக முடிந்துள்ளதாகச் சொல்கின்றனர். அப்படியானால் நடவடிக்கை ஏதும் இருக்காது. ஊழல் செய்தவர்கள் பிஜேபியில் சரணடைந்து விட்டால் நடவடிக்கை இருக்காது.ஜிஎஸ்டியால் சிறு குறுந் தொழில்கள் அனைத்தும் அழிந்துள்ளது. வியாபாரம் நடக்கவில்லை, படித்தவர்களுக்கு வேலை இல்லை, இதற்கு எதிராக மக்களிடம் உருவாகும் கோபத்தை மதக் கலவரமாக மாற்றமுயற்சிக்கின்றனர்.

ஜல்லிக்கட்டிற்காகப் போராடியவர்கள் நூறுநாள் வேலைப் பறிபோவதற்கு எதிராகவும் போராட வேண்டும், விலைவாசி உயர்வுக்கு எதிராக, வேலையில்லாத நிலைக் காக, ஜிஎஸ்டிக்கு எதிராகப் போராட வேண்டும். இவ்வாறு பேசினார்.மாவட்டச் செயலாளர் இ.சங்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வா.பிரமிளா, இ.முத்துக்குமார் உள்ளிட்ட பலர் பேசினர். கே.ஜீவா நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: