கி புயல் தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் சில பகுதிகளைப் புரட்டிப் போட்டது.  குமரி மாவட்டம் சின்னாபின்னமானது. கடலுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் மாயமானார்கள். மகாராஷ்ட்ர மாநிலத்தில் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த 68 படகுகள் கரை ஒதுங்கின. அதில் இருந்த 900 மீனவர்களை மகாராஷ்ட்ர அரசு மீட்டு உதவியது. கடலில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களை மீட்க, கடற்படை வீரர்கள் கடும் போராட்டம் நடத்தினர். கிழக்குக் கடற்கரைப் பகுதியில் 3 கப்பல்களும் மேற்கு கடற்கரைப் பகுதியில் 4 கப்பல்களும் கடற்படையைச் சேர்ந்த விமானங்களும் மற்றும் ஹெலிகாப்டர்களும் தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுவந்தன. கடற்படை வீரர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்துப் போராடி, ஏராளமான மீனவர்களைக் காப்பாற்றினர். கடற்படை வீரர்களின் தீவிர முயற்சியால் மீனவர்கள் பலி குறைந்தது.

கடற்படை அதிகாரிகளை அவமதித்ததாக குற்றச்சாட்டு

தற்போது, இந்த இரு புகைப்படங்களும் மீடியாக்களில் வெளியாகியுள்ளன. கடற்படைஅதிகாரிகளை நிற்கவைத்து மீட்புப்பணிகள்குறித்து கேட்டறிந்தற்காக இணையதளத்தில் கண்டனம் குவிந்துவருகிறது. இந்நிலையில் கடற்படை அதிகாரிகளை நிற்கவைத்து பேசியது குறித்து நிர்மலா சீதாராமன் தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

-நன்றி விகடன்

Leave A Reply