குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகதோல்வியை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக புதிய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வுக்கு பெரும்பான்மை கிடைக்காது; அதிகபட்சமாக 91 முதல் 99 இடங்களைத்தான் அக்கட்சி கைப்பற்றும் என ஏ.பி.பி.- சி.எஸ்.டி.எஸ். கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி 76 முதல்88 இடங்களில் வெல்லும் என்றும் அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.குஜராத்தில் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 93 எம்.எல்.ஏக்கள் தேவை என்ற நிலையில், ஓரிரு சதவிகித வித்தியாசத்தில் பாஜக-வின் தோல்வி தொடுக்கிக் கொண்டிருப்பது, புதியகருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதுவரை வெளியான கருத்துக் கணிப்புக்கள் அனைத்துமே பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்றே கூறின. கடந்த ஆகஸ்ட் மாதம் சிஎஸ்டிஎஸ்- லோக்நிதி- ஏபிபி நடத்திய கருத்துக் கணிப்பில், பாஜக 144 முதல் 152 இடங்களைக் கைப்பற்றும் என கூறப்பட்டிருந்தது. அதாவது தனிப்பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களைப் பாஜக பெறும் என்று அந்த கணிப்பு கூறியது. காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 26 முதல் 32 இடங்கள்தான் கிடைக்கும் என்றும் அது தெரிவித்தது.

ஆனால், நவம்பர் மாதம் மீண்டும் கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்ட சிஎஸ்டிஎஸ்- லோக்நிதி- ஏபிபி, இந்த முறை பாஜக-வுக்கு113- 121 இடங்கள்தான் கிடைக்கும் என்றது. காங்கிரஸ் 58 முதல் 64 இடங்கள் கிடைக்கும் என்றது.இதே ஏ.பி.பி- சி.எஸ்.டி.எஸ். நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 151 இடங்களும், காங்கிரஸூக்கு 32 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல், அக்டோபர் மாதம் நடத்திய கருத்து கணிப்பில் பாஜகவிற்கு 113 முதல் 121 இடங்களும், காங்கிரஸூக்கு 58 முதல் 64 இடங்களும்கிடைக்கும் என கணித்து இருந்தது. ஆனால்,தற்போது பாஜக-வுக்கு 91 முதல் 99 இடங்கள்தான் கிடைக்கும்; காங்கிரசுக்கு 78 முதல் 86 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறது.

இதில் இன்னொரு முக்கியமான தகவல் என்னவென்றால், ஒட்டுமொத்த வாக்கு சதவிகிதத்தை பார்த்தால், இன்றைய சூழலில் பாஜக- காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கும் சரிசமமாக 43 சதவிகித வாக்குகள் கிடைக்கும்என்று ஏ.பி.பி- சி.எஸ்.டி.எஸ். தெரிவிக்கிறது.

வாக்காளர்களைப் பொறுத்தவரையில் வர்த்தகர்கள் மத்தியில் பாஜகவின் செல்வாக்கு பெருமளவு சரிந்துள்ளது. அவர்களிடையே காங்கிரஸின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. அதேபோன்று பெண்களிடையேயும் பாஜகவின் வாக்கு வங்கி சரிந்துள்ளது. பெண்களிடையே 59 சதவீத அளவிற்குபாஜக-விற்கு ஆதரவு இருந்த நிலையில் அதுதற்போது 44 சதவிகிதமாக மாறியுள்ளது. அதே சமயம் காங்கிரஸூக்கு பெண்களிடையே ஆதரவு 42 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.ஒட்டுமொத்தமாக குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வின் வாக்குவங்கி 59 சதவிகிதத்திலிருந்து தற்போது 43 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. காங்கிரஸ் வாக்கு 29 சதவிகிதத்திலிருந்து 43 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இதை வைத்துப் பார்க்கையில், ஓரிரு சதவிகித வாக்குகள் மாறினால் பாஜக தோல்வியின் பாதாளத்தில் தள்ளப்படும் என்பதே உண்மை. நாளுக்கு நாள் சரிந்து வரும் பாஜக-வின் மோசமான நிலையை வைத்துப் பார்த்தால், இன்னும் சில நாட்களில் பாஜக-வின் செல்வாக்கு 40 சதவிகிதத்திற்கு கீழே போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, பாஜக தற்போது தோல்வியின் விளிம்பில் நிற்கிறது. அது தோற்கப் போவதும்உறுதியாகி இருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: