பாரிஸ்,
துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் பாரிஸ் குப்பை மேடாக மாறி வரும் சூழல் உருவாகி உள்ளது.

ஓநெட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான எச். ரெய்ன்யீர் நிறுவனத்தில் பணிபுரியும் 400க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் ஊதிய உயர்வி கோரி கடந்த டிசம்பர் 2ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் எதிரொலியாக பிரான்ஸின் பல தெருக்கள் குப்பை மேடாக மாறி வரும் நிலை உருவாகி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்நிலையில் இன்று பேச்சு வார்த்தையில் உரிய முடிவு எடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: