மீனவர்களுக்கு தலா ரூ. 1000  வழங்க உத்தரவு!
தமிழக மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக விசைப்படகு ஒன்றுக்கு 750 லிட்டர் டீசல், நாட்டுப்படகு ஒன்றுக்கு 200 லிட்டர் டீசல் வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், உணவுப்பொருட்கள் வாங்க மீனவர்களுக்கு தலா ரூ.1000 வழங்கவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.ஹாசினி கொலை: குற்றவாளி தஷ்வந்த் கைது!
சென்னையில் சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி, ஜாமீனில் வந்த பின்னர், வீட்டில் இருந்த பெற்ற தாயையையும் கொன்றுவிட்டு தப்பியோடிய தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளர்.

டிச. 25 முதல் ‘சுவிதா’  சிறப்பு ரயில்!
திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையேயான ‘சுவிதா’ சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. டிசம்பர் 25-ஆம் தேதி மாலை 3.30 மணியளவில் இந்த ரயில் புறப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.குன்னூர் மலை ரயில்  மீண்டும் இயக்கம்
குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. மழையால் 5 நாட்கள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த மலை ரயில் புதன்கிழமை முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

Leave A Reply