தில்லி,

தில்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் மற்றும் வீட்டின் பாதுகாவலர் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தில்லியில் ஷாஹ்தாரா மாவட்டத்தின் மேன்சரோவார் பூங்கா அருகே உள்ள வீட்டில் இருந்த 4 பெண்கள் மற்றும் வீட்டின் பாதுகாவலர் ஒருவர் என 5 பேர் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இது தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும்  கொள்ளையடிக்கும் நோக்குடன்  இந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது எனவும், கைது செய்யப்பட்ட 5 பேரும் கொல்லப்பட்ட பாதுகாவலரின் உறவினர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: