சென்னை;                                                                                                                                                                               கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 3 ஏ பணியிடங்களுக்கான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியன வரும் 14 -ஆம் தேதி முதல் சென்னையில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், தொழில் மற்றும் வணிக உதவி இயக்குநர், தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறை சார்நிலைப்பணி, புவியியலாளர் மற்றும் உதவி புவியியலாளர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்தத் தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நேர்காணல் தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறவுள்ளன.

இதில் பங்கேற்க தகுதியானவர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.இந்த நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியன வரும்14 முதல் வரும் 18 வரை சென்னை பாரிமுனையில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: