பெர்லின்
ஜெர்மனியில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில்  8 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து தென் கிழக்கே சுமார் 60 கி.மீ. தொலைவில் பேட் ஏப்ளிங் என்ற இடத்துக்கு அருகில் எதிர்பாராதவிதமாக பயணிகள் ரயிலுடன் டிபி கார்கோ என்ற மற்றொரு சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து மெரிடியன் ரயில்வே நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது ரோஸனீம் – ஹோல்ஸ்கிர்சென் இடையிலான ஒற்றைப் பாதையில் காலை 7 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது” விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

விபத்தைத் தொடர்ந்து பல பெட்டிகள் சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்த பெட்டிகளில் இருந்து பயணிகளை மீட்கும் பணியில் நூற்றுக்கணக்கானோர் ஈடுப்பட்டனர். மீட்புப் பணியில் 10-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

%d bloggers like this: