சென்னையில் செயல்பட்டு வரும் நோய் தடுப்பு மையத்தில் “National Institute of Epidemiology” காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி: இளநிலை பட்டம் பெற்று ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, தட்டச்சு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை “The Director, National Institute of Epidemiology” என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி அல்லது IPO-வாக எடுத்து செலுத்த வேண்டும்.

பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.nie.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
The Director-in-charge, National Institute of Epidemiology, Second Main Road, Tamil Nadu Housing Board, Ayapakkam, Chennai-600 077.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.12.2017

Leave A Reply

%d bloggers like this: