வளர்ச்சியடைந்த மாநிலம் என்றால் அதற்கு உதாரணம் கேரள மாநிலம் தான். கிராமம் முதல் நகரம் வரை சீரான வளர்ச்சி அடைந்துள்ளது, இடதுசாரிகளும். பாதிரிமார்களும் தான் கேரளாவில் தீண்டாமைக்கொடுமை முற்றிலுமாக ஒழித்துக்கட்டினார்கள். என்று காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் க.பழனித்துரை திண்டுக்கல்லில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு பேசினார்.

திங்களன்று நடைபெற்ற சிந்தனையரங்கத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது.
மானுட வாழ்வு விஞ்ஞான தொழில்நுட்ப கல்வி அடிப்படையில் மாறிவிட்டது. பணத்தை சம்பாதிப்பது ஒரு குறிக்கோள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். சந்தை பொருளாதாரத்தின் மூலம் வளர்ச்சி ஏற்படும் என்ற எண்ணம் கொண்டுள்ளோம். அதற்காகவே நாம் உலகமயம், தனியார் மயம், தாராளமயத்தை ஆதரிக்கிறோம். வளர்ச்சி என்ற அறிவிப்பு வரும் போதெல்லாம் இயற்கை வளங்கள் சுரண்டப்படப் போகிறது என்பதை நாம் எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பான குடிமகனாக மாறுவதற்கு நமது சமூகம் கற்றுக்கொடுக்கவில்லை. இந்த நாட்டின் வளர்ச்சி என்பது விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள், நெசவாளர்கள். என 77 சதவீதமான மக்களே. இவர்களது வாழ்வு எப்போது மேம்பாடு அடையுமோ அப்போது தான் இந்த நாடு முழுமையான வளர்ச்சி பெறும். கிராமங்கள் முதல் நகரங்கள் வரை வளர்ச்சி இருக்க வேண்டும். இன்றைக்கு அப்படிப்பட்ட ஒரு அரசிற்கு உதாரணமாக கேரள அரசு திகழ்கிறது.

தமிழ்நாட்டில் தொட்டால் தான் தீட்டு நிலவுகிறது. ஆனால் கேரள மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை பார்த்தாலே தீட்டு என தீ;ண்டாமை நிலவியது. தந்தை பெரியார் வைக்கத்தில் சென்று தீண்டாமைக்கு எதிராக போராடினார். கேரளாவில் தோன்றிய இடதுசாரி இயக்கமும், பாதிரிமார்களும் தான் அங்கு நிலவிய தீண்டாமை கொடுமைக்கு முற்றிலுமாக ஒழித்தார்கள். ஆனால் பெரியார் பிறந்து வளர்ந்த தமிழகத்தில். அவர் கிராமம் கிராமாக பிரச்சாரம் செய்த இந்த மண்ணில் இன்னும் தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது. இவ்வாறு முனைவர் பழனித்துரை பேசினார்.

இந்த சிந்தனையரங்கத்திற்கு பேராசிரியர் க.மணிவண்ணன் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் காஜாமைதீன், தொழிலதிபர் ராஜ்குமார், அறிவுத்திருக்கோவில் தாமோதரன், ஏ.டி.எஸ்.பி. சீனிவாசன், ஆகியோர் கலந்து கொண்டனர். ராஜகோபால் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: