நியூயார்க்,

காற்று மாசுபாடு குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் அபாயம் உள்ளதாக ஐ.நா., ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகளவில் 1 கோடியே 70 லட்சம் குழந்தைகள் காற்று மாசு மிக்க பகுதிகளில் வசிக்கின்றனர். அவர்களில் 1 கோடியே 22 லட்சம் குழந்தைகள் தெற்கு ஆசியாவில் உள்ளனர். கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் பகுதிகளில் 43 லட்சம் குழந்தைகள் நச்சு காற்றை சுவாசிக்கின்றன. இந்த நச்சுக்காற்றானது, குழந்தைகளின் நுரையீரலை மட்டும் அல்லாது, அவர்களின் மூளை வளர்ச்சியையும் சேதப்படுத்தி, எதிர்காலத்தை சிதைக்கிறது என காற்று மாசுபாடு தொடர்பாக ஐக்கிய நாடுகள் நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

இதை தடுக்க காற்று மாசு அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு பெற்றோர்கள், குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். குறைந்த காற்று மாசு இருக்கும் போது, முகமூடி அணிந்து அழைத்து செல்ல வேண்டும். குழந்தைகளுக்கு தாய்ப்பால், ஊட்டச்சத்து மிக்க உணவுகள் அளித்தும், தடுப்பு ஊசி போட்டு அவர்களின் நோய் பாதிப்பிலிருந்து மீளும் வகையில், குழந்தைகளின் உடல்நலனை காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: