சென்னை,
மக்கள் தங்கள் உரிமைகளுக்காக களப்போராட்டங்களில் ஈடுபடவதில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. காவல்துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணியகம், வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிக போராட்டங்களை நடத்திய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 2ஆம் இடத்தை பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியின் அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளது. இது பல்வேறு விதமான போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டது.
கடந்த ஆண்டில் மட்டும் 21,966 போராட்டங்களை நடத்தி உத்தரகாண்ட், நாட்டின் மிக அதிக போராட்டங்களில் ஈடுபட்ட மாநிலமாக திகழ்கிறது.
தமிழ்நாட்டிற்கு 2வது இடம்

இதையடுத்து 17,043 போராட்டங்களை நடத்தி தமிகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பஞ்சாப் 11,876, தேசிய தலைநகரம் டெல்லி 7,904 போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

2015ஆம் ஆண்டு நிலவரம்:

கடந்த 2015ஆம் ஆண்டு, 20,450 போராட்டங்களை நடத்தி தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: