புதுதில்லி;
இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் இலங்கை வீரர்கள் தில்லி காற்று மாசுபட்டால் கடும் சிரமத்துக்கு இடையே விளையாடியுள்ளனர். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விராட் கோலியின் இரட்டை சதத்தால் 7 விக்கெட்டுக்கு 536 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

முதலில் திணறிய இலங்கை அணி மாத்யூஸ் மற்றும் சந்திமால் ஆகியோரின் அபார சதத்தால் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 373 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது.
163 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தவான் கோலி ரோகித் சர்மா ஆகியோரின் அரை சதத்தால் இந்திய அணி 2–வது இன்னிங்சில் 52.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.இந்திய அணி இலங்கைக்கு இமாலய இலக்காக 410 ரன்கள் நிர்ணயித்தது. இலங்கை அணி தொடக்க வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேற டி சில்வா அபாரமாக ஆடி சதமடித்து அசத்தினார்.

லக்மால் ஏமாற்றம் அளிக்க வெற்றி இந்திய அணிக்கு சென்று விடும் என்று எதிர்பார்க்காக்கப்பட்டது.ஆனால் அந்த எதிர்பார்ப்பை ரோஷன் சில்வா, டிக்வெல்லா ஜோடி தவிடுபொடியாக்கிவிட்டனர்.இந்த ஜோடி நங்கூரம் போல் நிலைத்து நின்று  தடுப்பு ஆட்டம் ஆடினர். இந்த ஜோடியை பிரிக்க இந்திய பந்து வீச்சாளர்கள் மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. 103 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன்களை இலங்கை அணி எடுத்த போது டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ரோஷன் சில்வா (154 பந்துகளில் 74 ரன்கள்) டிக்வெல்லா( 72 பந்துகளில் 44 ரன்கள்) எடுத்து களத்தில் இருந்தனர். மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: