கொல்கத்தா :
கொல்கத்தாவில் இன்று ஐபிஎல் ஆட்சிக்குழு நடைபெற்றது.கூட்டத்தில் ஏலம் குறித்து புதிய விதிகள் ஆகியவற்றை எந்த விகிதத்தில் அறிமுகப்படுத்துவது என்று இறுதி முடிவு எடுக்கப்பட்டது.கூட்டத்தின் இறுதி முடிவில் கடந்த இரு ஆண்டுகளாக புனே, குஜராத் அணிகளுக்காக விளையாடிய வீரர்களிலிருந்து சென்னை, ராஜஸ்தான் அணிகள் தங்களுக்கான வீரர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம் எனவும்,பழைய அணியில் இருந்து 5 வீரர்களை அணிகள் தக்கவைத்துக்கொள்ளலாம் என ஐபிஎல் ஆட்சிக்குழு அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பின் மூலம் தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே திரும்புகிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளின் தடைக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் அடுத்த ஆண்டு மீண்டும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கின்றன. 2013-ம் ஆண்டில் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக சென்னை, ராஜஸ்தான் அணிகளின் உரிமையாளர்கள் குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜ் குந்த்ரா அணிகள் மீது 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது.

Leave A Reply

%d bloggers like this: