லக்னோ;
உத்தரபிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது ஏற்கெனவே அறிந்த செய்திதான். தேர்தல் நடைப்பெற்ற 198 நகராட்சிகளில், 128-க்கும் மேற்பட்ட நகராட்சிகளிலும், 438 பேரூராட்சிகளில் 300-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளிலும் பாஜக தோற்றது. நகராட்சி வார்டுகளை எடுத்துக் கொண்டால் மொத்தமுள்ள 5 ஆயிரத்து 261 வார்டுகளில், 4 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட வார்டுகளிலும், 5 ஆயிரத்து 434 பேருராட்சி வார்டுகளில், 4 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட வார்டுகளிலும் பாஜக-வினர் தோற்றனர்.

அதேநேரம் 5 ஆயிரத்து 390 பேருராட்சி வார்டுகளில் சுயேச்சைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வென்ற இடங்கள் 4 ஆயிரத்து 728. அதேபோல 5 ஆயிரத்து 217 நகராட்சி வார்டுகளில் பாஜக வென்றது 914 மட்டும்தான். தோற்ற இடங்கள் 4 ஆயிரத்து 303. ஆனால், தேசிய, நடுநிலை ஊடகங்கள் என்று சொல்லிக் கொள்ளும் முன்னணி கார்ப்பரேட் ஊடகங்கள் எதுவும் இந்த தோல்வியைக் கண்டுகொள்ளவில்லை. மின்னணு வாக்குப்பதிவு நடந்த மாநகராட்சிகளில் 16 இடங்களில் 14 இடங்களை பாஜக வென்றதை மட்டும் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி, பாஜக மாபெரும் வெற்றி பெற்றதாக ஊதித் தள்ளிக் கொண்டிருந்தன.
ஆனால், அத்தனை தகிடு தத்தங்களையும் மீறி, பாஜக-வின் படுதோல்வி வெளியில் வந்து விட்டது.

பாஜக பலமான அடி வாங்கியிருப்பதையும், எதிர்க்கட்சிகள் சுமார் 60 சதவிகிதம் வரையிலான இடங்களில் வெற்றி பெற்றிருப்பதையும் புள்ளி விவரங்கள் காட்டி விட்டன.
ஆரம்பத்தில் வடிவேலு பாணியில் வெற்றி.. வெற்றி என்று கூப்பாடு போட்ட பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்ட பாஜக தலைவர்களும், சத்தமே இல்லாமல் அமைதியாகி விட்டனர். பொதுவாக இவர்கள் அவ்வளவு எளிதில் அடங்குகிற ஆட்கள் இல்லை. தோல்வியே கிடைத்திருந்தாலும், மாபெரும் வெற்றி என்று கூசாமல் பொய் பேசுபவர்கள். இருப்பினும் உத்தரபிரதேச தேர்தல் விவகாரத்தில் வாயடைத்து போய் விட்டார்களே என்று பார்த்தால், அதற்கும் காரணம் இருந்திருக்கிறது.

அது என்னவென்றால், உத்தரபிரதேசத்தில் பாஜக-வுக்கு கிடைத்தது சாதாரண அடியில்லை; மரண அடி என்பதுதான். அதாவது வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடைபெற்ற இடங்களில் 45 சதவிகித பாஜக வேட்பாளர்களின் டெபாசிட்டை பறித்துக் கொண்டு, குஜராத் மக்கள் அவர்களை விரட்டியடித்துள்ளனர்.இப்போதுதான் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன. ஆனால், பாஜக-வினருக்கு ஏற்கெனவே தெரிந்து போனதால், தானாக வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ளக்கூடாது என்ற வகையில் அப்படியே போட்டு அமுக்கியுள்ளனர்.உத்தரபிரதேசத்தில் 12 ஆயிரத்து 644 உள்ளாட்சி இடங்களுக்கான தேர்தலில் 8 ஆயிரத்து 38 வேட்பாளர்களை பாஜக நிறுத்தியுள்ளது. இவர்களில் 3 ஆயிரத்து 656 பேரின் டெபாசிட் போயிருக்கிறது.

மொத்தமாக உத்தரபிரதேசத்தில் வென்ற பாஜக வேட்பாளர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 366 மட்டுமே ஆகும்.பேரூராட்சி வார்டுகளில் 664 பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் அதைவிட இருமடங்குக்கும் அதிகமாக ஆயிரத்து 462 பாஜக வேட்பாளர்கள் டெபாசிட்டை பறிகொடுத்து இருக்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: