திருவனந்தபுரம்,

ஓகி புயலில் சிக்கி உயிரிழந்த கேரள மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

ஓகி புயலினால் கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. புயலின் போது கடலில் மீன்பிடிக்க சென்ற தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், மீனவர்கள் பலர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கேரளாவில் 31 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கேரளாவில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: