உதகை, டிச.6-
உதகை பிலிம் சொசைட்டி சார்பில் இரண்டாவது திரைப்பட விழா வரும் டிச.8,9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் உதகை அசெம்பளி திரையரங்கில் நடைபெற உள்ளன.

இதுகுறித்து விழாக்குழு தலைவர் பாலநந்தகுமார் கூறியதாவது; இந்த திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக 87 நாடுகளில் இருந்து 1,659 குறும்படங்கள் பங்கெடுக்கின்றன. அதில், தமிழ் உட்பட இலங்கை, ஈரான், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம் நாடுகளைச் சேர்ந்த 123 குறும்படங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் 40 படங்கள் என மூன்று நாட்களுக்கு காலை 8 மணிக்கு துவங்கி 11 மணி வரை குறும்படங்கள் திரையிடப்பட உள்ளன. மேலும், திரையரங்கை ஒட்டிய அரங்கில் தமிழ், மலையாளம் உட்பட பல்வேறு மொழி சார்ந்த பிரபல முன்னணி இயக்குனர்கள், எழுத்தாளர்கள் பங்குபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave A Reply