அடிலெய்டு;
கிரிக்கெட் உலகமே அதிகம் எதிர்பார்க்கும் ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பகல்–இரவு) ஆட்டமாக அடிலெய்டில் மைதானத்தில் நடைபெற்றது.

ரன் குவிப்பு;                                                                                                                                                                         டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 442 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஷான் மார்ஷ் 126 ரன்களும் இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கிரேக் ஓவெர்டன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் தனது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி சுழற்பந்துவீச்சாளர் லியோன் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 227 ரன்னில் சுருண்டது.கிரேக் ஓவெர்டன் மட்டும் ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் எடுத்தார். லியோன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இங்கிலாந்து அணி பாலோ–ஆன் ஆனாலும் ஆஸ்திரேலிய அணி பாலோ–ஆன் கொடுக்காமல் .215 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை தொடர்ந்தது.

ஆண்டர்சன் அபாரம்;
இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் கிறிஸ்வோக்ஸ் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணி நிலைகுலைந்து போனது. ஆஸ்திரேலிய அணி 2–வது இன்னிங்சில் 58 ஓவர்களில் 138 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 20 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் நடையை கட்டினர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டும், கிறிஸ்வோக்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.ஆஸ்திரேலிய மண்ணில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியது இதுவே முதல்முறையாகும்.

ஆஸ்திரேலிய அணி சொற்ப ரன்னில் சுருண்டதால் ரசிகர்கள் மத்தியில் அடிலெய்டு டெஸ்ட் போட்டி பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.354 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜோரூட் 67 ரன்னும், கிறிஸ்வோக்ஸ் 5 ரன்னும் எடுத்து களத்தில் நின்றனர்.

ஸ்டார்க் மிரட்டல்;                                                                                                                                                                      எந்த அணி வெற்றி பெரும் என்ற ரத்தக்கொதிப்புடன் அடிலெய்டு மைதானத்துக்குள் ரசிகர்கள் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக நிரம்பி வழிந்தது. மிட்செல் ஸ்டார்கின் அசுர வேகத்தில் 55 ரன்கள் எடுப்பதற்குள் மீதமுள்ள 6 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி 233 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணியிடம் மண்டியிட்டது.
ஆஸ்திரேலிய அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றுள்ளது.இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி கவனமாக விளையாடியிருந்தால் இப்போட்டியில் எளிதாக வென்றிருக்கும். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியை அதிக ரன்கள் குவிக்கவிட்டதால் இரண்டாவது இன்னிங்சில் போராடியும் பயனில்லாமல் இங்கிலாந்து அணி பரிதாபமாக தோற்றது.

!…..சதீஸ் குமார்….!

Leave A Reply

%d bloggers like this: