துணை ராணுவப் படைகளில் ஒன்றான அஸ்ஸாம் ரைபிள் பிரிவில் காலியாக 754 டிரேட்ஸ்மேன்ஸ் மொழிப்பெயர்ப்பாளர் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 754
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, +2 தேர்ச்சி மற்றும் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடற்தகுதி, டிரேடு தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: Hindi Translater Gd-II, Building & Road, Staff Nurse போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.200-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். இதர பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

பெண்கள், எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.assamrifies.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2017
மேலும் வயதுவரம்பு, விரிவான தகுதி விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.assamrifles.gov.in/onlineapp கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave A Reply

%d bloggers like this: