வேதியியலில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பிற்குப் பிறகு மின்னணு நுண்ணோக்கியின் ஒவ்வொரு நட்டும்போல்ட்டும் பயன்பாட்டுக்கு உகந்ததாக மாற்றப்பட்டுவிட்டது எனலாம்.  2013ம்ஆண்டில் அணுவினுள்ளே உள்ளதுகள்களை தேவையான அளவுக்குப்பெரிதாக்கிப் பார்ப்பது சாத்தியமாகிவிட்டது.
உயிரிமூலக்கூறுகளின் முப்பரிமாணக் கட்டமைப்புகளை தற்போது ஆய்வாளர்கள் சாதாரணமாகத் தயாரிக்கமுடியும். கடந்த சில ஆண்டுகளில் ஆன்டிபயாடிக் எதிர்ப்பை உருவாக்கும் புரோட்டீன்களிலிருந்து ஜிகா வைரஸ் வரை உள்ள அனைத்து நுண்ணுயிரிகளின் பிம்பங்கள் அறிவியல் இதழ்களில் ஏராளமாக இடம் பிடிக்கின்றன. இந்த பாய்ச்சல் வளர்ச்சிக்குக் காரணம் இந்தஆண்டு வேதியியல் நோபல் பரிசு வென்றவிஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புதான்.

உடற்கூறியல் : 2017-ம் ஆண்டுக்கானஉடற்கூறியல் அல்லது மருத்துவத்திற் கான நோபல் பரிசு ஜெஃப்ரி சி.ஹால்,மைக்கேல் ரோஸ்பாஷ், மைக்கேல் டபிள்யு.யெங் ஆகிய மூன்று அமெரிக்க நாட்டவர்களுக்குக் கிடைத்துள்ளது. தாவரங்களும் விலங்குகளும் மனிதர்களும் தங்களது உடலியல் இசைவுகளை (biடிடடிபiஉயட சாலவாஅ) பூமியின் சுற்றுகளுக்கேற்றபடி தகவமைத்துக் கொள்கின்றன என்பதற்கு மேற்கண்ட விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு விளக்கம்அளிக்கிறது.

நோபல் விஞ்ஞானிகள் மூவரும் பழஈக்களை மாடல் உயிரியாக எடுத்துக்கொண்டு அவற்றின் தினசரி உயிரியல்இசைவைக் கட்டுப்படுத்தும் மரபணுவைப் பிரித்தெடுத்தனர். இந்த மரபணுவால் குறியீடு செய்யப்பட்ட ஒரு புரோட் டின் இரவு நேரத்தில் உயிரணுவில் திரட்டப்பட்டு பகலில் சிதைவடைகிறது என அவர்கள் கண்டுபிடித்தனர். பின்னர்இதன் தொடர்ச்சியாக வேறு புரோட்டீன் களையும் இனம் கண்டு மரபணுவின் உள்ளே உயிரியல் கடிகாரம் (biடிடடிபiஉயட உடடிஉம) செயல்படும் முறையைக் கண்டறிந்தனர். மனிதர்கள் உட்பட உள்ள அனைத்து உயிரினங்களின் உள்ளே ஒரேமுறையில்தான் உயிரியல் கடிகாரங்கள் செயல்படுகின்றன என்றும் அவர்கள் காண்பித்தனர். நமது சிக்கலான உடற்கூறியலின் பல்வேறு அம்சங்களோடு நம் உடலின் உயிரியல் கடிகாரம் தொடர்புடையது. மனிதர்கள் உட்பட உள்ள அனைத்து உயிரினங்களும் நாள்தோறும் நடக்கும் உடல் செயல்பாடுகளின் சுழற்சிகளைக் (உசைஉயனயைn சாலவாஅள) கட்டுப்படுத்த ஒரேமாதிரியான செயல்முறையைக் கடைப்பிடிக்கின்றன என்பது தற்போது தெளிவாகியிருக்கிறது.

பெரும்பாலான நமதுமரபணுக்கள் உயிரியல் கடிகாரத்தின்கட்டுப்பாட்டில் இருக்கின்றன. விளைவாக, கவனமாக வடிவமைக்கப்பட்ட உடல் செயல்பாடுகளின் சுழற்சி ஒருநாளில் மாறுபடும் பல்வேறு கட்டங்களுக்கேற்றபடி நமது உடற்கூறியலை மாற்றியமைக்கிறது. உடற்கூறியலில் நோபல்பரிசு பெற்ற விஞ்ஞானிகளின் முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்புகள் உடல் செயல்பாடுகளின் உடலியல் (உசைஉயனயைn biடிடடிபல) ஒரு ஆய்வுக்குரிய செயலூக்கம் மிகுந்த துறையாக மாறியிருக்கிறது. நமது உடல்நலன், ஆரோக்கியமான வாழ்வு ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கண்டுபிடிப்பை உலகிற்குத் தந்துள்ள உடற்கூறியலில் நோபல் பரிசு பெற்றுள்ள மூன்று விஞ்ஞானிகளைக் கொண்டாடுவோம்.(உதவிய கட்டுரை : 2017 நவம்பர் மாத ட்ரீம் 2047 இதழில் பிமன் பாசு எழுதிய கட்டுரை)

  • பேரா. கே.ராஜு

Leave A Reply

%d bloggers like this: