வாஷிங்டன்,
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் மரத்தில் பொருத்தப்பட்ட அலங்கார விளக்குகளை கடித்த அணிலை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியையடுத்து சீ கிரிட் நகரில் நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக பிரத்தேச அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்த கிறிஸ்துமஸ் மரத்தின் மீது இருந்த அலங்கார விளக்குகளை அணில் ஒன்று சேதப்படுத்தி உள்ளது. இதையடுத்து அணில் மீது குற்ற வழக்குப்பதிவு செய்த காவல் துறை அதை கைது செய்தனர். பின்னர் அந்த அணிலை பெயிலில் விடுவித்துள்ளனர்., இந்த தகவலை காவல்துறையினர் தங்கள் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

Leave A Reply