மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீக்கதிர் சென்னைப் பதிப்பு இடைக்குழு 8வது மாநாடு செவ்வாயன்று (டிச.5) சைதாப்பேட்டையில் நடைபெற்றது.
மூத்த தோழர் டி.எஸ்.பாலசுப்பிரமணியம் கொடி ஏற்றினார்.அ.குமரேசன் வரவேற்றார். நேசமணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ் துவக்கி வைத்தார். மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிறைவுரையாற்றினர். மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக் குழு உறுப்பினர்கள் என்.சீனிவாசன், மதுரை பதிப்பு இடைக்குழுச் செயலாளர் ப.முருகன் உள்ளிட் டோர் வாழ்த்திப் பேசினர். 7 பேர் கொண்ட இடைக்குழுவின் செயலாளராக எம்.உஷாராணி தேர்வு செய்யப்பட்டார்.தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கத்திற்கு மதவாதிகள் மிரட்டல் விடுத்ததற்கும்,

நீதிமன்ற தீர்ப்பை முகநூலில் விமர்சித்ததற்காக முன்னாள் பொறுப்பாசிரியர் சு.பொ.அகத்தியலிங்கத்தின் மீது சைபர் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்தும் கார்டூனிஸ்ட் பாலாவைக் கைதை கண்டித்தும் ஊடகவியலாளர்கள் மீதான பொய் வழக்குகளை திருப்பெறக்கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை மாநகரில் பத்திரிகையாளர்களுக்கு குறிப்பாகச் சிறு பத்திரிகையாளர்கள் ளுக்கு வீட்டு வசதி செய்து கொடுக்க வேண்டும். பணியில் இருக்கும் பத்திரிகையாளர்கள் மரணமடைந்தால் குடும்பத்திற்கு வழங்கும் நிதி, ஓய்வூதியம் பெறுவதற்கான நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: