திருப்பூர், டிச.6-
அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கக்கோரி புதனன்று திருப்பூரில் வாலிபர் சங்கத்தினர் மண்டல அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.

திருப்பூர் மாநகராட்சியின் 1 மற்றும் 5 ஆவது வார்டுக்கு உட்பட்ட புதுக்காலனி, சௌபாக்கியா நகர், ராஜீவ்காந்தி நகர் பகுதியிலுள்ள சாக்கடைகள் தேங்கி அடைத்துள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே, உடனடியாக சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்து மருந்து தெளித்திட வேண்டும். புதுக்காலனி மெயின் வீதியில் பழுதடைந்து அபாயம் விளைவிக்கும் நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றிட வேண்டும். அப்பகுதியில் எரியாமல் இருக்கும் மின் விளக்குகளை உடனடியாக மாற்றுதர வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வேலம்பாளையம் நகரகுழுவின் சார்பில் புதனன்று ஒன்றாவது மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

முன்னதாக, இந்த மனுவினை அளிக்கையில், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ் நகர செயலாளார் சுப்பிரமணியம், நகரகுழு உறுப்பினர்கள் ஆறுமுகம், உமாநாத், வாலிபர் சங்க நகர தலைவர், நவநீதன், துணை செயலாலர் ஹனிபா, சதீஸ் உட்பட 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply