பொங்களூரு,
கர்நாடகாவில் மருத்துவ மையத்திற்கு நோயாளிகளை பரிந்துரைக்கு ரூ. 200 கோடி கமிஷன் வழங்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் உள்ள 2 சோதனை குழாய் கருத்தரிப்பு மையங்கள், 5 நோய் கண்டறியும் மையங்களில் 3 நாட்கள் வருமான வரி சோதனை நடந்தது. இதில் ரூ.1.4 கோடி, மூன்றரை கிலோ தங்க நகை மற்றும் தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டன. ஆய்வகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத வருமானம் ரூ.100 கோடிக்கு மேல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வகங்களுக்கு பரிசோதனைக்கு பரிந்துரைத்து நோயாளிகளை அனுப்பும் டாக்டர்களுக்கு கமி‌ஷன் கொடுப்பது குறித்த ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. இந்த கமி‌ஷன் ஒவ்வொரு ஆய்வகத்துக்கும் வேறுபட்டாலும் பொதுவாக எம்.ஆர்.ஐ. சோதனைக்கு 35 சதவீதமும், சி.டி.ஸ்கேனுக்கு 20 சதவீதமும் டாக்டர்களுக்கு கமி‌ஷன் வழங்கப்படுவது தெரிய வந்து உள்ளது. ஒரே ஒரு மையம் மட்டுமே நோயாளிகளை பரிந்துரைக்க கட்டணமாக டாக்டர்களுக்கு ரூ.200 கோடி வரை கொடுத்து உள்ளது வருமானவரி அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரிய வந்து உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: