பெங்களூரு,

பெல்காம் காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தான் தேசிய கீதத்துக்கு நடனம் ஆடியதாக பாஜக தலைவர் ஒருவர் வெளியிட்ட வீடியோ போலியானது என கர்நாடக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெல்காம் நகர பாஜக பொதுச்செயலாளர் ராஜு தோபன்னவார் கடந்த சனிக்கிழமை பத்திரிக்கையாளர் சந்திப்பை நிகழ்த்தி அதில் ஒரு வீடியோ கிளிப்பிங்கை வெளியிட்டார். இதில் பெல்காவி மாநகராட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் பாகிஸ்தான் தேசிய கீதத்துக்கு நடமாடும் காட்சி பதிவாகியிருந்தது.

அந்த வீடியோவில் முசாலிம், அஜீம் மற்றும் நஜீம் ஆகிய மூவரும் உள்ளார்கள். இவர்கள் இது போல பாகிஸ்தான் தேசிய கீதத்துக்கு நடனமாடுவது தேசியத்துக்கு எதிரான நடவடிக்கை ஆகும். இதன் மூலம் இவர்களுக்கு தேச விரோத எண்ணங்களும் பாகிஸ்தானுக்கு ஆதரவு உணர்வும் இருப்பது தெளிவாகிறது என கூறிய ராஜு, தனது மொபைலில் உள்ள இந்த வீடியோவை உள்ளூர் ஊடகங்களுக்கு ஒளிபரப்ப கோரி அனுப்பி உள்ளார்.

இது குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் அமர்நாத் ரெட்டி கூறுகையில், இந்த வீடியோ உண்மையானது அல்ல. இது ஒரு போலி வீடியோ. சில அமெச்சூர் வீடியோ கிராபர்களால் மிக்சிங் செய்யப்பட்டு யூ டியூப்பில் ஏற்றப்பட்டுள்ளது. இந்த பொலியான வீடியோ தற்போது யூ டியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது போல பல போலியான வீடியோக்கள் யூ டியூப்பில் உள்ளது. அதில் இதுவும் ஒன்று என்றார்.

Leave A Reply

%d bloggers like this: