தில்லி,

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சாலை விபத்து, தற்கொலை காரணமாக 1600 ராணுவ வீரர்கள் உயிரிழந்து வருகிறார்கள்.

இந்திய ராணுவத்தில் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் என மொத்தம் 13 லட்சத்து 49 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர். அவர்களில் ராணுவத்தில் 11 லட்சத்து 32 வீரர்களும், 41 ஆயிரம் அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.

விமானப்படையில் 12 ஆயிரம் அதிகாரிகளும், 1 லட்சத்து 3 ஆயிரம் வீரர்களும், கடற்படையில் 9 ஆயிரம் வீரர்களும், 52 ஆயிரம் வீரர்களும் உள்ளனர்.

இறுதியாக 1999-ம் ஆண்டில் கார்கில் போர் நடைபெற்றது. அதன்பின்னர் போர் எதுவும் நடைபெறவில்லை. இருந்தாலும் வருடத்துக்கு 1600 ராணுவ வீரர்கள் உயிரிழந்து வருகிறார்கள். விபத்துகள் மூலமும், தற்கொலை மற்றும் ராணுவ வீரர்களுக்குள் ஏற்படும் மோதல் போன்றவற்றினால் வீரர்கள் உயிரிழக்கிறார்கள்.

இதுதவிர காஷ்மீர் எல்லைக் கோடு கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்துடன் நடைபெறும் சண்டை மற்றும் ஊடுருவும் தீவிரவாதிகளுடன் ஏற்படும் மோதலிலும் உயிரிழக்கின்றனர். விபத்துகளில் 350 வீரர்களும், தற்கொலை மூலம் 120 பேரும் பலியாகின்றனர்.

இந்திய ராணுவத்தில் அதிக கட்டுப்பாடுகள், குடும்ப பிரச்சினைகள், வேலைப்பளு போன்றவற்றால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக தற்கொலைகள் நடைபெறுகின்றன.

இதன்மூலம் உலகிலேயே இந்திய ராணுவத்தில் தான் அதிக அளவில் வீரர்கள் தற்கொலை செய்கின்றனர் என்ற நிலை உள்ளது.

உடல் ரீதியாக ஏற்படும் காயங்களால்  உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகிறது. அது போர்க் காலங்களில் ஏற்படும் உயிரிழப்பை விட 12 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 1480 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். எல்லை தாண்டும் தீவிரவாதிகளுடன் மோதல், பாகிஸ்தான் வீரர்களின் தாக்குதல் உள்ளிட்ட பலத்த காயங்களால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

Comments are closed.

%d bloggers like this: