தருமபுரி, டிச.3-
தருமபுரி மாவட்டம் இண்டூரில் நடைபெறும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக்குழு கூட்டத்துக்கு வந்த மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “மத்திய பாஜக அரசு சாதி, மதம், உணர்வை தூண்டிவிடுவதோடு எழுத்தாளர் கள், பத்திரிகையாளர்கள், அறிஞர்கள், மாற்றுக் கருத்தை சொல்பவர்களை கொலை செய்கிறது” என்றார்.

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, மத்திய அரசிற்கு அடிபணிகிற அரசாக மாறிவிட்டது என்றும் மாநில மக்களின் நலனில் அக்கறை இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். மதவாதத்தை தோற்கடிக்கவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சிபிஐ, சிபிஎம் இரண்டு கட்சிகளும் திமுக வேட்பாளரை ஆதரிக்கின்றன. ஜனநாயக முறையில் தேர்தல் நடந்தால் திமுக வெற்றி பெறும். பணம் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக தேர்தலை நிறுத்தும் முடிவு சரியல்ல. எனவே நியாயமான முறையில் தேர்தல் நடத்தவேண்டும் என்று அவர் வேண்டுகோள்விடுத்தார். மாநில துணைச் செயலாளர் மு. வீரபாண்டியன், தேவராசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: