கிருஷ்ணகிரி,

கே.ஆர்.பி அணை மதகு உடைந்ததால் செயற்பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நீர் அழுத்தம் காரணமாக அணையின் முதல் மதகில் உடைப்பு ஏற்பட்டு கரையோர  மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. பராமரிப்பு பணியில் ஏற்பட்ட குறைபாடு தான் அணையில் ஏற்பட்டுள்ள உடைப்பு காரணம் என கூறி அணையின் செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தற்போது அணைக்கு நீர்வரத்து 2,000 கனஅடியாக உயர்ந்துள்ளதால் மதகு உடைப்பை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாமல் பொதுப்பணித்துறை அவதிக்குள்ளாகினர்.

Leave A Reply

%d bloggers like this: