தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கலப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு(36). இவரது தாயார் ரேனுகாவுக்கும் (60) பக்கத்து வீட்டு செல்லப் பன் மகள் சரிதாவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள் ளது. பிறகு, ரேணுகாவை செருப்பால் அடித்துள்ளார் சரிதா. ஆனாலும், தனது தாயாரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து சென்றுள் ளார் பிரபு.இந்நிலையில், சரிதா புகாரின் விசாரணைக்காக பெரும் பாலை காவல் நிலையத் துக்கு பிரபுவை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மனைவி அலமேலுவின் கண் முன்பாகவே பிரபுவை லாக்கபில் தள்ளி கைகளை பின் பக்கமாக கட்டியும், காலை நீட்டச் சொல்லியும் கடுமையாக தாக்கியுள்ளார் ஆய்வாளர் ஜெயசீலன். பின்னர், மனைவி அலமேலுடன் பிரபுவை அனுப்பி வைத்துள்ளார்.

உள் காயத்தால் பாதிக்கப்பட்ட பிரபு, பென்னாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, பிரபுவிடம் காவல் துறையினர் வெற்று பேப்பரில் கையொப்பம் பெற முயன்றுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பிரபு வீட்டிற்கு சென்று காவல் ஆய்வாளர், அந்த மருத்துவமனையைவிட்டு பிரபு உடனடியாக வெளியில் வரவேண்டும். இல்லை என்றால் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் தள்ளிவிடுவோம் என மிரட்டியுள்ளார்.இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம்பள்ளி பகுதிச் செயலாளர் பிரபுவுக்கு ஆறுதல் கூறியதோடு, பிரபுவை கடுமையாக தாக்கிய காவல் துணைஆய்வாளர் ஜெயசீலன், காவலர் சக்தி மீது வழக்கு பதிவு செய்து துறைரீதியான நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: