மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, நவம்பர் 30 வியாழனன்று பெய்ஜிங் செல்கிறார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் அங்கு செல்லும் அவர் நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை பெய்ஜிங்கில் நடைபெற உள்ள “உலக அரசியல் கட்சிகளுடனான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உரையாடல்” என்ற தலைப்பிலான உயர்மட்ட ஆலோச னைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த ஆலோசனை யில் பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர்களுக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.சீத்தாராம் யெச்சூரியுடன் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் பாதல் சரோஜ் மற்றும் அவதேஷ் குமார்ஆகியோரும் செல்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: