தீக்கதிர்

அருணாச்சல பிரதேசம்: 88 மாணவிகள் ஆடைகளை அவிழ்த்து அவமதித்த ஆசிரியர்கள்

இட்டாநகர்,

அருணாச்சல பிரதேசத்தில் பள்ளி மாணவிகள் 88 பேரின் ஆடைகளை அவிழ்த்து ஆசிரியர்களே அவமானப்படுத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அருணாச்சல பிரதேசம் பாப்பம் பரே மாவட்டத்தின் டானி ஹப்பா பகுதியில் உள்ள கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6 மற்றும் 7ம் வகுப்பு பயிலும் மாணவிகள் துண்டு சீட்டில் தலைமை ஆசிரியரை பற்றி தவறாக எழுதியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட 88 மாணவிகளை தண்டிக்கும் விதமாக அவர்களின் மேலாடைகளை கழற்றி சக மாணவர்கள் முன்னிலையில் நிற்க வைத்து 3 ஆசிரியர்கள் அவமானபப்டுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 23ம் தேதி நடந்த இந்த அதிர்ச்சிகர சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.