கந்துவட்டி தொடர்பான நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்திருந்தது. அதில் தொலைக்காட்சியில் அளித்த சில பேட்டிகளில் அவரே பேசிய கருத்துகளைத்தான் கோடிட்டுக் காட்டியிருந்தோம்.

https://youtu.be/viSoKjf5nk4
https://youtu.be/cy96q5FA9rE

மார்க்சிஸ்ட் கட்சி அறிக்கைக்கு பதில் அறிக்கை விடுத்துள்ள திரு.சீமான் தனது தரப்பை விளக்கியுள்ளார். கந்துவட்டி உட்பட வட்டிக் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும். அரசே முறையான கடன் வழங்க வேண்டும், தனியார் கடன் முறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து நாம் தமிழர் கட்சிக்கும் இருக்குமாயின் அது வரவேற்கத்தக்கது என அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

Leave a Reply

You must be logged in to post a comment.