கிருஷ்ணகிரி;
தென்பெண்ணை ஆற்றில் உள்ள கே.ஆர்.பி அணையின் மதகு உடைந்து அதிகளவிலான தண்ணீர் வெளியேறி வருவதால், ஆற்றின் கரையோரம் உள்ள 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 52 அடியைத் தாண்டியதால், உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டு வந்தது. இதனால் கடலூர் திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு கடந்த 100 நாட்களாகவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இன்று மாலை கே.ஆர்.பி. அணையின் முக்கிய மதகில் உள்ள இரும்புக் கதவு திடீரென உடைந்தது. இதனால், அணையிலிருந்து கூடுதலான நீர் வெளியேறத் துவங்கியுள்ளது. அணையின் மதகுகள் முற்றிலுமாக உடையும் நிலையில் இருப்பதால் சுற்றி உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். போலீஸார், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர், பேரிடர் மேலாண்மையில் ஈடுபட்டுள்ளனர்.மதகின் கதவு துருபிடித்து இருந்தது பற்றி, பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் அதை மாற்றவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.