லண்டன்,

இந்தியாவில் விற்பனையாகும் மருந்துகளில் 10ல் ஒன்று போலியானது என உலக சுகாதார நிறுவன, வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 10 சதவீதம் போலியானவை அல்லது நம்பகத்தன்மை இல்லாதவை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் சார்பில் சர்வதேச கண்காணிப்பு மற்றும் பரிசோதனை முறை கடந்த 2013 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இது சர்வதேச அளவில் 3 கட்டமாக ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தது. அப்போது 1500 தயாரிப்புகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முடிவில் ஏழை மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான போலி மருந்துகள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மலேரியா மற்றும் ஆன்டி பயாடிக் எனும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மாத்திரையிலேயே போலிகள் அதிகம் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவன ஆய்வு கூறியுள்ளது. இதன்மூலம் பொதுமக்களின் உயிர் பறிபோகும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: