இராமேஸ்வரம்;
இலங்கை சிறையில் உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 116 மீனவர்களையும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.கடந்த 6 மாதங்களில் எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 116 மீனவர்களை படகுகளுடன் இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றது.
அவர்கள் அங்குள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு ஊர்க்காவல்துறை, பருத்தித்துறை, மன்னார் ஆகிய பகுதிகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்களையும், படகுகளையும் மீட்க மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்தி, இராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தம் போன்றவற்றை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 116 மீனவர்களையும் நல்லெண்ண அடிப்படையிலும், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டும் விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான ஆவணங்களை இலங்கை அரசு இன்னும் சில நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்றும், அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி 116 மீனவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

%d bloggers like this: