புதுதில்லி;
குஜராத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும், பாஜக-வை தோற்கடிக்கும் வாய்ப்பு உள்ள வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வாக்களிக்குமாறும், குஜராத் மக்களுக்கு தில்லி முதல்வர் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆம் ஆத்மி கட்சியின் 5-ஆவது ஆண்டு விழா தில்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு, அக்கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் பேசியிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின், ஜிஎஸ்டி வரி, பண மதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்திருக்கின்றனர். பாஜக ஆட்சியில் ஏராளமான முறைகேடுகள் நடந்து வருகின்றன.

காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் ஊழல் அதிகமாக இருக்கிறது. பாஜக ஊழல் கட்சியாக உருவெடுத்துள்ளது.இப்போது குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. இதை இந்த நாடே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. குஜராத் தேர்தலில் பாஜக தோல்வி அடைய வேண்டும் என்று எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள்.

இந்த நேரத்தில் குஜராத் மக்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். அங்குள்ள தொகுதிகளில் பாஜக-வை தோற்கடிக்கும் வகையில் எந்த வேட்பாளர் இருக்கிறாரோ, அவருக்கு வாக்களித்து பாஜக-வைத் தோற்கடியுங்கள்.

ஆம் ஆத்மி வேட்பாளரோ அல்லது மற்ற கட்சியைச் சேர்ந்த வேட்பாளரோ பாஜக-வை தோற்கடிக்கும் வகையில், சக்தி யாருக்கு உள்ளது என்பதை கண்டறிந்து வாக்களியுங்கள்; ஒருபோதும் பாஜக வேட்பாளருக்கு மட்டும் வாக்களித்து விடாதீர்கள்.
இவ்வாறு கெஜ்ரிவால் பேசியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.