அரியலூர்,

அரியலூரில் மின்னல் தாக்கியதில் பெண்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கல்லூர்பாலம் பகுதியில் மின்னல் தாக்கியதில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த உண்ணாமலை, செந்தமிழ்ச்செல்வி, அஞ்சலை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: